ஈரோடு டிச 14:
காலிங்கராயன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்தாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள், குளிரி ஆகியவை படர்ந்துள்ளதால் தண்ணீரின் ஓட்டம் தடைபட்டிருந்தது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் ஓட்டம் தடை பட்டதால் தண்ணீர் தேங்கி கரைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு பாசன விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு கடந்த 2 நாட்களாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today