ஈரோடு அக்.18:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுப்பராயன் எம்.பி, மகேந்திரன், வீரபாண்டியன், செல்வராஜ் எம்.பி. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பழனிசாமி, சிவபுண்ணியம், ஆறுமுகம், குணசேகரன், ராமசாமி, பத்மாவதி, என்.நஞ்சப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இன்றைய தேசிய, மாநில அரசியல் நிலைமை குறித்தும், கட்சியின் அமைப்பு நிலை, மாநாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாளையும் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்ட முடிவில் பல்வேறு முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
https://www.communistparty.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/