ஈரோடு ஆக 17:

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உட்பட பல்வேறு அமைப்பு சார்பில் காத்திருப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஒப்படைக்காமல், மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் கண்டித்து முற்றுகையிட்டனர்.

மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் அருணாசலம், பொதுச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் குமரேசன் உட்பட பலர் பேசினர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் ச.முத்துசாமி போனில் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today