ஈரோடு ஆக 7:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார்  முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு முன்பு இரவிலேயே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

பின்னர் கடந்த மாதம் 24ம் தேதி முதல்  சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதையடுத்து  கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும்  கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது கையிருப்பு தகுந்தது போல் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு கோவேக்சின் 2-ம் டோஸ் கடந்த சனிக்கிழமை போடப்பட்டது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று கோவேக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, ஜம்பை, சித்தோடு, திங்களூர், நம்பியூர், பி.என்.பாளையம், புளியம்பட்டி, அத்தாணி அப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பொறுத்தவரை ஈரோடு காந்திஜி ரோடு, நேதாஜி ரோடு, ராஜாஜிபுரம், கருங்கல் பாளையம், சூரம்பட்டி உள்பட 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என மாவட்டம் முழுவதும் இன்று 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today