ஈரோடு அக் 28:

குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமை கல்வி திட்டத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று ஈரோட்டில் தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமை கல்வி திட்டத்தை வான்முகில் அமைப்பானது தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 125 கிராமங்களில் செயல்படுத்தி வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் வான்முகில் அமைப்புடன் இணைந்து 10 மலை கிராமங்களில் சுடர் தொண்டு நிறுவனம் முன்னெடுத்து நடத்த உள்ளது. இந்த திட்ட தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் வரவேற்றார். வான்முகில் அமைப்பின் இயக்குனர் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் நோக்கங்களை மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா தேவி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் சுப்பிரமணியன், செங்குந்தர் கல்விக் கழக செயலாளர் சிவானந்தன், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/