ஈரோடு நவ 29:

ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்டமாக சத்தி ரோடு பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில் பழைய ஆர்.டி.ஓ. ஆபீஸ், வடக்கு போக்குவரத்து அலுவலகம், பிள்ளையார் கோவில் ஆகியவையும் அடங்கும். இதில் பிள்ளையார் கோவில் அருகே 50 ஆண்டு பழமையான அரச மரம் ஒன்று இருந்தது. அந்த  பகுதியின் அடையாளமாக அரசமரம் இருந்து வந்தது.

இதையடுத்து அரச மரத்தையும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசமரத்தை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்தனர். இதனை ஏற்று அரசமரம் வேரோடு எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தன்னார்வலர்கள் சிலர் உதவி செய்ய முன் வந்தனர்.

இதையடுத்து இன்று காலை அந்த பழமையான அரச மரம் வேரோடு முழுமையாக எந்த ஒரு சேதமில்லாமல் வேரோடு அகற்றப்பட்டன. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசமரம் அவரது பணி நடந்தது. பின்னர் அந்த அரசமரம் லாரியில் ஏற்றி வைராபாளையத்தில் உள்ள பகுதிகளில் மீண்டும் நடப்பட்டது. இதேபோல் அந்தப் பகுதியில் இருந்த மற்றொரு அரசமரம் மற்றும் ஒரு வேப்ப மரமும் பொக்லைன் எந்திரம் மூலம் வேரோடு அகற்றப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு வைராபாளையத்தில் நடப்பட்டது. இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். https://www.smartcities.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/