ஈரோடு ஆக 5:

விசைத்தறி மேம்பாட்டிற்கு பல்வேறு புதிய திட்டங்களை விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று விசைத்தறி உரிமையாளர்களிடம் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், கோவை மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணி, மாநில செய்தி தொடர்பாளர் கந்தவேல் மற்றும் நிர்வாகிகள் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் கைத்தறி துறை அரசு செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை வழங்கினர். அப்போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து  வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றும், விசைத்தறி மேம்பாட்டிற்கான பல்வேறு புதிய திட்டங்களை விரைவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் அமைச்சர் காந்தி உறுதியளித்தார். இதே போல கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் பெற்றுள்ள விசைத்தறி மூலதன கடன் ரூ.65 கோடி தள்ளுபடி பற்றியும், அடப்பு கூலி உயர்வு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததாக கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today