ஈரோடு டிச 6:
கொடுமுடி வட்டார உழவர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பார்த்தீனிய களை செடிகளை பயன் தரும் இயற்கை உரமாக மாற்றும் முறை குறித்து யோசனை தெரிவித்துள்னர். கொடுமுடி வட்டாரத்தில் தற்போதைய மழை காலத்தில் வேகமாக பார்த்தீனிய களைச்செடி வளர்கிறது. இவை, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சுகாதார தீங்கு விளைவிக்கும். இவை அழிக்கப்பட வேண்டும்.
இதற்காக அனைத்து கிராமங்களிலும் பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பார்த்தீனிய களை செடியை பயன் தரும் இயற்கை உரமாக மாற்றலாம் என்பதையும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கிறோம். பார்த்தீனிய செடி, குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து ஏராளமான பூக்களை உருவாக்கும். மனிதர்களுக்கு கண் எரிச்சல், தோல் நோயையும், கால்நடைகளுக்கு வயிற்று போக்கு, உள்ளுறுப்புகள் பாதிப்பு, பால் – இறைச்சி தரம் குறைதல், இனப்பெருக்க திறன் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
இக்களை செடியை சாதாரண உப்பை தண்ணீரில் கரைத்து தெளித்தால், எளிதில் கட்டுப்படுத்தலாம். இச்செடியை அரை அடி நீளத்துக்கு துண்டு, துண்டாக வெட்டி தரை மீது பரப்பி, அதன் மேல் டிரைகோடெர்மாவிரிடி எனும் நன்மை செய்யும் பூஞ்சாணத்தை துாவ வேண்டும்.
அதன் மேல் நறுக்கப்பட்ட பார்த்தீனிய செடியை பரப்பில, அதன் மேல் யூரியா உரத்தை துாவி, இவ்வாறு பல அடுக்குகளாக மாற்றி, 3 அடி வரும் வரை அடுக்கி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். 45வது நாள் அந்த கலவை நன்கு மக்கி பயன்தரும் இயற்கை உரமாக மாறிவிடும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பார்த்தீனிய செடியும் அழிக்கப்படும், என வேளாண் உதவி இயக்குனர் பெ.யசோதா தெரிவித்துள்ளார். https://www.tantransco.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today