ஈரோடு நவ 18:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி கடந்த 2003 ஏப்ரல், 1 முதல், 2006 மார்ச் 31ம் தேதி வரை சாதாரண முன்னுரிமை திட்டத்திலும், ரூ.10,000 -செலுத்தும் சுய நிதி திட்டத்திலும் விண்ணப்பித்தனர்.
சாதாரண முன்னுரிமை திட்டத்தில் 2006 ஏப்ரல் 1 முதல் 2007 மார்ச் 31 வரை பதிவு செய்த விண்ணப்பங்கள் மற்றும் ரூ.25,000- செலுத்தும் சுய நிதி திட்டத்திற்கு 2007 ஏப்ரல் 1 முதல் 2012 மார்ச் 31 வரை பதிவு செய்த விண்ணப்பங்கள் மற்றும் ரூ.50,000- செலுத்தும் சுய நிதி திட்டத்திற்கு 2009 ஏப்ரல் 1 முதல் 2012 மார்ச் 31 வரை பதிவு செய்த விவசாயிகளின் விண்ணப்பங்கள் மின் இணைப்பு வழங்குவதற்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிமை சான்று மற்றும் உரிய ஆவணங்களை அளிக்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக்கடிதம் கிடைக்க பெற்றதும் சம்மந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் ஆவணங்களை அளித்து, தங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதன் படி முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும்.
மேலும் விரைவு (தட்கல்) விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விரைவாக விவசாய மின்னிணைப்பு பெற ஏற்கனவே விவசாய மின்னிணைப்பு வேண்டி முன்பதிவு செய்துள்ள மற்றும் தற்போது புதிதாக பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பகடிதத்துடன் தங்களது பகுதியை சேர்ந்த செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.
கூடுதல் விபரங்களுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். இதன்படி ஈரோடு செயற்பொறியாளர் (நகரியம்) -9445852170, ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் -9445852180, பெருந்துறை செயற்பொறியாளர் -9445852190 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். https://www.tangedco.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/