ஈரோடு சூலை 20:

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், பட்டா வழங்கப்படாமல் உள்ளதாக மலைக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தியூர் வட்டம், பர்கூர் மலைக்கிராமம் எப்பத்தாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வருகின்றனர். விவசாய கூலித்தொழில் செய்து வரும் இம்மக்கள் அரசின் சார்பில் பட்டா வழங்க கோரி பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்துறை சார்பில் வீடுகளை காலி செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு அரசின் சார்பில் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today