ஈரோடு ஆக 3:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில், பவானியில் உள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், தலையநல்லுார் பொன்காளியம்மன் கோவில், ஈரோடு – சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி அடுத்த பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பவளமலை முத்துகுமாரசுவாமி கோவில், நஞ்சை காளமஞ்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜபெருமாள் கோவில், ஈரோடு அடுத்த நஞ்சை காளமங்கலம் நாகேஸ்வரர் குலவிளக்கம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர வைராபாளையம், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில், காஞ்சிகோவில் சீதேவியம்மன் கோவில், நசியனுார் மதுரகாளியம்மன் கோவில், திருவாச்சி கரியபெருமாள் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்களிலும் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதித்துள்ளனர்.மேலும் பல கோயில்களில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூ, பிரசாதம் போன்றவை வழங்குவதையும் நிறுத்தி உள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today