ஈரோடு டிச 10:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாடுகளைக் கொண்டு வருவார்கள். இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிப் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரவில்லை. இதனால் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வந்து வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று பசு 300, எருமை 150, கன்று 50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாட்டு வியாபாரம் மந்தமாகவே இருந்தது. அதேசமயம் தமிழகத்தில் இருந்து கரூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் சிலர் வந்திருந்தனர்.  https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today