ஈரோடு சூலை 3:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. அன்று முதல் பஸ் போக்குவரத்து, கடைகள், டாஸ்மாக் போன்றவை முடக்கப்பட்டது. தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு வரும் 11ம் தேதி வரை அமல்படுத்தி உள்ளனர்.

இதன்படி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் பொருட்காட்சி, உணவகங்கள், பஸ் இயக்கம் போன்றவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளைய இயக்கத்துக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பஸ்களையும் துாய்மைப்படுத்தி, தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்துள்ளனர். பின்னர் டயர், பேட்டரி உள்ளிட்டவைகளை மறு இணைப்பு செய்து, நாளைய இயக்கத்துக்கு தயார் செய்தனர்.

இன்று காலை முதல் அந்தந்த பஸ்களுக்கான நடத்துனர், ஓட்டுனர் ஆகியோர் வந்து, தங்களுக்கான பஸ்களை இயக்கிப்பார்த்து, அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய உள்ளனர். அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று நடந்தது.

அதுபோல அனைத்து கோவில்களிலும் நேற்று முதல் சுத்தம் செய்து, சிறப்பு பூஜைகளை செய்து திங்கள் கிழமை முதல் மக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்க தயாராகி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை, அரங்கு உள்ளிட்டவைகளையும் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே