ஈரோடு நவ 15:
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரபி பருவத்துக்கான அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு, விவசாயிகளை சேர்ப்பது குறித்த அறிவிப்பின்படி வரும் பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.
அதற்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாதவர்கள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, பயிர் காப்பீடு செய்யலாம். அதற்கான கட்டணத்தை செலுத்திடும் வகையில், வங்கி விடுமுறை நாளான இன்றும் (13), நாளையும் (14) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும். இத்தகவலை, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கே.ரேணுகா தெரிவித்துள்ளார். https://www.tnagrisnet.tn.gov.in,
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/