ஈரோடு ஆக 19:

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன பகுதியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது என கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்ட அளவில் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தலைவராக கலெக்டர், உறுப்பினர்களாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர், நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மேலாளர், மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாய சங்க தலைவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எத்தனை இடங்களில் ஆரம்பிப்பது, எந்த தேதியில் தொடங்குவது, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து கொள்முதல் நிலையங்களை தொடங்குவது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today