ஈரோடு நவ 10:

தீபாவளி பண்டிகை விற்பனை முடிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரந்தேறும் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை வரை நடைபெறும். இந்த சந்தையானது ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் கூடும்.

இங்குள்ள கடைகளில் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டும் அல்லாது, கேராள, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்து ஜவுளிகளை வாங்கி செல்வது வழக்கம்.தீபாவளி பண்டிகை சீசனையொட்டி கடந்த ஒன்றரை மாதங்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் 75சதவீதற்கு மேல் விற்பனையானது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை கடந்த 4ம் தேதி நிறைவடைந்ததையொட்டி, இன்று கூடிய ஜவுளி சந்தையில் வியாபாரிகள் வருகை குறைவால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) வியாபாரிகள் கூறுகையில்,தீபாவளி விற்பனை முடிந்ததால் இன்று கூடிய சந்தையில் ஒரு சில வெளிமாநில வியாபாரிகள் மட்டுமே வருகை தந்தனர். அடுத்து கார்த்திகை மாதம் சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்கள் வேட்டி, துண்டு, பெட்ஷிட் போன்றவைகளை அதிகமாக வாங்கி செல்வார். இதற்காக வியாபாரிகள் அடுத்த வாரம் முதல் கார்த்திகை மாத சீசனுக்கு தயார் ஆவோம், என்றனர். https://www.wholesaletextile.in