ஈரோடு ஆக 13:

இந்தியன் வங்கியில் பணியாற்றும் தற்காலிக இடைநிலை மற்றும் தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்தியன் வங்கி ஊழியர் சங்க துணைத்தலைவர் பி.சிங்காரம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.பூவேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வங்கி பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர் அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today