ஈரோடு ஆக 6:

பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றினர். டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது உட்பட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றியதாகவும், விரைவில் இது தொடர்பாக மாநில நிர்வாகிகள் சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today