ஈரோடு சூலை 2: ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சாவடிபாளையம்புதூர் அருகே ஆர்.டி.பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே ரயில்வே நுழைவு மேம்பாலமும், அதற்கு முன்பாக இரும்பு தடுப்பும் உள்ளது.

ரயில்வே கீழ்பாலம் உயரம் குறைவாகவும், ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்லும்படி உள்ளது. இப்பாலத்தில் உயரம் குறைந்த லாரி, கார் போன்றவை மட்டும் செல்ல முடியும். நேற்று உயரமான டேங்கர் லாரி ஒன்று வந்து, நுழைவு தடுப்பு கம்பியை உடைத்து நின்றது. அந்த லாரி மீது கம்பி விழுந்து பிடித்து கொண்டதால், லாரியை நகர்த்த முடியவில்லை.அவ்வழியாக புதூர், மொடக்குறிச்சி ரோடு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தனர். மொடக்குறிச்சி போலீசார், ரயில்வே அதிகாரிகள் வந்து லாரி மற்றும் நுழைவு கம்பியை அகற்றினர். அதன்பின் போக்குவரத்து சீரானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே