ஈரோடு சூலை 12:

தமிழ் புலிகள் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து தலித் தலைவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலித் தலைவர்கள், அமைப்புகளில் உள்ளவர்கள் ஆதிக்க சக்திகளால் கொலை செய்யப்படுகின்றனர். அச்சம்பவங்களில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தினர். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விஸ்வநாதன், கவுதம் வள்ளுவன், பாலு, பிரவீன் குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today