ஈரோடு ஆக 31: ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேசிய தொழிலாளர்கள் சங்கம் ஐ.என்.டி.யு.சி., 32வது செயற்குழுக்கூட்டம் நிர்வாகத் தலைவர் கே.ரவி தலைமை நடந்தது.

வி.ரவி, பி.மனோகரன் ஆகியோர் முன்னிலையில் பொதுச் செயலாளர் என்.துரைசாமி தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்து பேசினார்.கரூர் கிளை செயலாளர் முகம்மது முஸ்தபா நன்றி கூறினார்.

இணை பொறுப்பாளர்களான ஆர்.பாபு இணைத் தலைவராகவும், எம்.மக்பூல் துணைப் பொதுச் செயலாளராகவும் பி.முருகன் இணைச் செயலாளராகவும் ஏகமனதாக நியமிக்கப்பட்டனர்.பல்வேறு பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.
https://www.erode.today/