ஈரோடு ஆக 3:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சித்தோடு கன்னிமார்காடு தந்தை பெரியார் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை போட்டு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா, மின்சார வசதி, குடிநீர், சாலை, கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today