ஈரோடு சூலை 16:

ஈரோட்டை சேர்ந்த குறிஞ்சி சிவகுமார் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி, நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு சென்னையில் பொறுப்பேற்றார். நேற்று ஈரோட்டுக்கு வந்த அவர், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா, ஈ.வெ.ரா.பெரியார், கருணாநிதி போன்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியது,கடந்த பத்து ஆண்டுகளில் அரசு கேபிள் டி.வி, பெரிய நஷ்டத்தில் இயங்குகிறது. 400 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்துள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது தமிழகத்தில் அரசு கேபிள் மூலம் 32 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் கவனம் செலுத்தாமலும், தனியார் நிறுவனங்களை ஊக்குவித்ததாலும் 26 லட்சம் இணைப்பாக குறைந்தது. அரசு மூலம் 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அரசு வாங்கி உள்ளது. 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பத்து லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் என்ன ஆனது என தெரியவில்லை. இதுபற்றியும், விசாரிக்கப்படும். கேபிள் ஆப்ரேட்டர்கள் பெரிய அளவிலான தொகையை அரசுக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவற்றை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அதன்பின் பெரியார் நினைவில்லம் சென்று அங்குள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today