ஈரோடு டிச 10:

ஈரோடு மாவட்டத்தில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டவர்கள், அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக அரசால் 2022-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. உயிர் காத்தல் போன்ற வீரமிக்க செயல்கள் புரிந்த அரசு ஊழியர்க்ள, சீருடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது 6 பதக்கங்கள் உள்ளடக்கியதாகும். 3 பதக்கங்கள் பொதுமக்களின் சேவையை பாராட்டியும், 3 பதக்கங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்காகவும் வழங்கப்பட உள்ளது.

ரூ.9 ஆயிரம் மதிப்புளள்ள பதக்கம், ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்ப படிவத்தினை http://awards.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today