ஈரோடு நவ 17:

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில், குடியிருப்பு பகுதிகளை கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் திட்டம் நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி குடியிருப்போர் நல சங்கங்கள் மூலம் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றலாம்.

இதற்கான திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் இல்லது 3-ல் ஒரு பங்கு தொகை பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட வேண்டும். மீத தொகை மாநகராட்சியால் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த பகுதிகண்காணிக்கப்படும்.அதன்படி ஈரோடு மாநகராட்சி 47-வது வார்டுக்கு உள்பட்ட எல்.ஐ.சி. நகர்-ரைஸ் மில் ரோடு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் 50 சதவீதம் தொகை செலுத்தும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

திட்ட தொகையில் 50 சதவீதமான ரூ.54 ஆயிரத்து 570-க்கான வரைவோலையை மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எம்.மணி, கே.வி.சந்திரசேகரன், என்.கிருஷ்ணமூர்த்தி, கேபிள் ரமேஷ் ஆகியோர் ஆகியோர் வழங்கினார்கள். குறிப்பிட்ட பகுதியில் 7 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், 50 சதவீதம் தொகை பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டதால், குடியிருப்போர் நல சங்கத்தினரே பணியை மேற்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/