ஈரோடு டிச 13:

ஈரோடு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்பேரில் ஈரோடு மாநகராட்சி தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் ஆலோசனையின் பேரில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் அந்தந்த பகுதி ஏழை மக்களுக்கு அரிசி வழங்கி வருகிறார்கள். ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோட்டை பகுதி தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான கருப்புசாமி அரிசி வழங்கினார். https://www.mohua.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today