கோபிசெட்டிபாளையம் செப் 18:

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழைக்கு சுமார் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், கரட்டூர். தாசம்பாளையம், ஒத்தகுதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்த்த கனமழையால் கங்கம் பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப் பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த  சுமார் 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,ஒரு வருட கால பயிரான கரும்பு, ஓரிரு வார காலத்தில்  அறுவடை செய்ய வேண்டிய நிலையில்  இருந்தது.இந்நிலையில் நேற்று இரவு பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழைக்கு பல லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. அரசு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/