ஈரோடு டிச 28:

ஆலையில் இருந்து வெளியேறும் நிலக்கரித் துகள்களால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு விவரம்:

2000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் எங்கள் பகுதியில் கடந்த பல வருடங்களாகத் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் வாயுவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நிறுவனத்தில் இருந்து புகைபோக்கி மூலமாக வெளியேறும் புகையில் கலந்து வரும் நிலக்கரித் துகள்கள் வீடுகளில் படிந்து கடும் மாசுபாட்டை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு கடும் மாசுபாடு ஏற்படுத்தி வரும் டெக்ஸ்டைல் நிறுவனத்தை இடமாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.pollution.org

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today