ஈரோடு டிச 30:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் கொளத்துப்பாளையம், இச்சிப்பாளையம், கொந்தளம், வெள்ளோட்டம்பரப்பு போன்ற கிராமங்களில் ரூ.4.15 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

கொளத்துப்பாளையம், கோசக்காட்டூர் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் 1.40 லட்சம் ரூபாயில் நடந்து வரும் தனி நபர் விவசாய நிலத்தில் அமைக்கப்படும் பண்ணை குட்டை 18 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டம் பணி என பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதுபோன்று கொடுமுடி, சிவகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் 100 நாள் வேலை திட்ட பணிகள், கொடுமுடியில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி என, ரூ.4.15 கோடி மதிப்பிலான பணிகளை ஆய்வு செய்தார். வேளாண்துணை இயக்குனர் முருகேசன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, உதவி இயக்குனர் தியாகராஜன், கொடுமுடி பி.டி.ஓ.,க்கள் பத்மநாதன், சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today