ஈரோடு ஆக 20:

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் விதை நெல் வாங்கும்போது விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு சான்று பெற்ற விதை நெல் குவியல்களை மட்டுமே வாங்க வேண்டும்.

மேலும், முளைப்புத்திறன், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். கட்டாயம் விற்பனை ரசீது பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனைக்கான உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். மேலும், உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்து உள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today