ஈரோடு டிச 30:

தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சி இன்று தொடங்கி வரும் ஜனவரி 12ம் தேதி வரை 15 தினங்களுக்கு நடைபெறுகின்றது. இக்கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 40 விற்பனை நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் போர்வைகள், கோரா சேலைகள், பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம் உள்ளிட்ட அனைத்து வகையான கைத்தறி ரகங்களும் இடம் பெற்றுள்ளன. இக்காண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்திற்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.பி., அந்தியூர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.eoivienna.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today