ஈரோடு நவ 13:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்புசெழியன் தலைமை வகித்தார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் மீனாட்சிசுந்தரம், பசுவனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் குழந்தைவேலு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி மாவட்டத்தில் இருந்து தலா, ஐந்து மாணவ, மாணவியர் என, 25 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

கல்லுாரி மாணவர்கள், 20 பேர் பங்கேற்றனர்.‘ சமுதாய சிற்பி பண்டித நேரு, அகில ஜோதி நேரு,  நான் விரும்பும் தலைவர் நேரு, இந்திய விடுதலையில் நேருவின் பங்கு’ என்பது உட்பட எட்டு தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடந்தது. பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் முதல் மூன்று பரிசுக்கு தலா, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. https://www.tnschools.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today