ஈரோடு நவ 22:

ஈரோடு மாவட்டம், கொடுமுடி  கொம்பனைப்புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் முகாமை துவக்கி வைத்துனர்.

முகாமில் பொது மருத்துவம், இருதய நோய்கள் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், குழந்தை நல பிரிவு, அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு பிரிவு, கர்ப்பிணி பெண்கள், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, மனநலம், புற்றுநோய், காசநோய் முதலிய நோய்களுக்கு தலை சிறந்த மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றதாக தெரிவித்தனர். முகாமில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/