ஈரோடு டிச 13:

பாட்னாவில் இருந்து நேரடியாக ஈரோடுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்து இந்த ரெயில் இயக்கப்படுகிறது. வரும் டிசம்பர் 13ம் தேதி மதியம் 2 மணிக்கு பாட்னாவில் இருந்து இந்த சிறப்பு ரெயில் கிளம்புகிறது.

இந்த சிறப்பு ரெயில் பாட்னா சாகப், பக்தியர்பூர், மதுபூர், சித்தரஞ்சன், பங்குரா, ஜெய்ப்பூர் கே ரோடு, கட்டாக், பழசா, விசாகப்பட்டணம், ராஜமுந்திரி, விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக டிசம்பர் 15ம் தேதி காலை 8.40 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்தடையும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளது. https://www.indianrailways.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today