ஈரோடு, அக். 27:

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக அனைத்து துறை ஒழுங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான யூ.டி.ஐ.டி., பதிவு, மருத்துவசான்றுடன் தேசிய அடையாள அட்டை வழங்குதல், வேலைவாய்ப்பு பதிவு, மாதாந்திர உதவித்தொகை பதிவு, உதவி உபகரணங்கள் பதிவு, வங்கி கடன் பதிவு, கொரோனா தடுப்பூசி செலுத்துதல், வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பங்கள் பெறுதல், முதல்வரின் மருத்துவகாப்பீடு பதிவு போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி இன்று 26ம் தேதி பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்திலும், 28ம் தேதி புஞ்சை புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் முகாம் நடக்க உள்ளது. முகாமில் பங்கேற்க வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல் ஆவணங்கள் எடுத்து வரவேண்டும். https://www.scd.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/