ஈரோடு அக் 15:

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், கட்சி  நிர்வாகிகள் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துரைமுருகன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதேபோல் மேலூர் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையில் சில அவதூறு கருத்துக்களை பேசியுள்ளார். தொடர்ந்து சீமான் வன்முறை பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொது அமைதியைக் காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை ஈ.பி.ரவி சந்தித்து தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் ஹெல்மட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், மாரியப்பன், சிறுபான்மை பிரிவு சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் புனிதன், அம்மன் மாதேஷ், பாட்சா செல்வம், மண்டல தலைவர்கள் திருச்செல்வம், விஜய் பாஸ்கர், அயுப் அலி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனகராஜ், வின்சென்ட், கோபால் அசோக் ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். https://www.tnpolice.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/