சென்னிமலை சூலை 24:
சென்னிமலையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மக்கள் நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புஞ்சை பாலதொழுவு, புதுப்பாளையம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் 80.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி சாக்கடை வசதி அமைப்பதற்கான பணியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவுக்கான படுக்கையினை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா முதியோர் ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கான உதவித் தொகையினை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பமாக அளித்துள்ளனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா வேண்டி அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் தகுதியுளளவர்களுக்கு வழங்கப்படும். மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுள்ளார். அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுபோன்று அரசு நிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற நலத்திட்டங்கள் வழங்குவது தொடர்ந்து வழங்கப்படும், கூறினார்
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today