ஈரோடு அக் 8:

ஈரோடு ஆர்.கே.வி., ரோடு பகுதியில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்த இடத்தில் தற்போது  வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. இதன் காரணமாக அங்கு தோண்டி எடுக்கப்பட்ட மண், ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூட மைதானத்தில்  கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் காமராஜர் பள்ளிக்கூட சுற்றுச்சுவரும் இடிந்து கிடக்கிறது. மழை காரணமாக பள்ளிக்கூடத்தின் முன்பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்கிறது. இதனால் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவற்றை உடனடியாக கட்டிக்கொடுக்கக்கோரியும், மைதானத்தை சீரமைத்து கொடுக்கக்கோரியும், பள்ளிக்கூடம் முன்பு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.  நேற்று கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மைதானத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த மண், இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவர் பகுதி மற்றும் பள்ளிக்கூடத்தின் முன் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்ற பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. அவர் கூறும்போது, ‘பள்ளிக்கூடம் முன்பு தேங்கி உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு, அங்கு மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மைதானத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ள மண் சமமாக நிரப்பப்பட்டு மீதமுள்ள மண் வெளியேற்றப்படும். இடிந்துள்ள சுற்றுச்சுவரும் விரைந்து கட்டி முடிக்கப்படும்‘ என்றார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஸ் ராஜப்பா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/