ஈரோடு செப் 17:
தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டதையடுத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதி மொழியேற்பு நடைபெற்றது. சமூக நீதிக்காக பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததோடு இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சமூக நீதிநாள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதே போல எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., சசிமோகன் தலைமையிலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பிரேமலதா தலைமையிலும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல அரசு பள்ளிகள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதிநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/