ஈரோடு சூன் 28: ஈரோட்டில் 933 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி , மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மத்திய, மாநில அரசின் நிதி 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இதில் 277.50 கோடி ரூபாய் மதிப்பிலான 16 பணிகள் நிறைவு பெற்று விட்டன. தற்போது ரூ. 933 கோடி மதிப்பில் 42 பணிகள் நடக்கிறது. இதில் ரூ.40 கோடி மதிப்பில் வெண்டிபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி, ரூ.20 கோடி மதிப்பில் வெண்டிபாளையத்தில் பயோ மைனிங், ரூ.80 கோடி மதிப்பில் கனி மார்க்கெட் ஜவுளி வளாகம் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி களை விரைவாகவும், தரமான தாக நிறைவு செய்யவும் , கூடுதல் வசதிக்கு தனி திட்டம் தயாரித்து வழங்கவும் கலெக்டர் கேட்டுக் கொண்டார். இத்திட்டத்தில் நடந்து முடிந்த பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தர விட்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே