ஈரோடு அக்.16:
தந்தை பெரியார் குறித்து அவதூறு மற்றும் களங்கம் விளைவிக்கும் வகையில் இணையதளத்தில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தபெதிக சார்பில் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தந்தை பெரியார் குறித்து பொய்யான, அவதூறான அவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், பொய்யான செய்தியை இணையதளத்தில் தட்சிணாமூர்த்தி என்பவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழர்களுக்கு பெரும் நன்மைகளை செய்த தந்தை பெரியாரை தமிழர்களுக்கு கேடு செய்தவர் என்றும், தமிழ் மற்றும் தமிழ் இலக்கியங்கியங்களை பழித்தவர் என்றும் குறிப்பிட்டு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கவேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்மந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.https://www.tnpolice.gov.in, https://www.periyar.world
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/