ஈரோடு டிச 31:
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் காயத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழக முதல்வரின் உத்தரவுப்படி நடைபெற உள்ளது. நலவாரியத்தில் பதிவு பெற்ற கொத்தனார், டைல்ஸ் பொருத்துநர், மின்சார வேலை, வர்ணம் பூசுபவர், குழாய் பொருத்துனர், மரவேலை போன்ற தொழில் புரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ள 1659 தொழிலாளர்களுக்கு ஒரு நாள் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட உள்ளதால் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தொழிற்சங்கத்தின் மூலமோ அல்லது நேரிலோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சென்னிமலை சாலை, ஐடிஐ பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnuwwb.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today