ஈரோடு டிச 31:

விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்க உள்ளது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தமிழ் மீடியத்தில் பயிலும் சுய நிதி பள்ளி ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதேபோல் ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகம் ஏற்கனவே வந்து ஸ்டாக் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று 30 துவக்க பள்ளிகளுக்கு பாட புத்தகம் வழங்கும் பணி நடந்தது. பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர் டோக்கன் வாரியாக ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடபுத்தங்கள் வழங்கப்பட்டன. ஆறு ஆயிரம் பாட புத்தகங்களை பள்ளி ஆசிரியர்கள் வாங்கி சென்றனர். இன்று 31ல் நடுநிலை பள்ளிளுக்கு பாட புத்தகம் வழங்கப்பட உள்ளது. ஆனால் மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நோட்டு இன்னமும் வந்து சேரவில்லை. நோட்டுகள் வந்து கொண்டிருப்பதாக பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர். https://www.tnschools.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today