ஈரோடு அக் 16:

ஈரோடு மாநகராட்சி 25 வது வார்டு இடையன் காட்டு வலசு பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈவெரா பாதாள சாக்கடை சரியாக அமைக்காமல் விட்டதால், சாக்கடை நீர் வெளியேறாமல் சாலைக்கு வருவதை ஆய்வு செய்தார். அவ்விடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து, உடனே மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்திட கேட்டுக்கொண்டார். பிறகு இடையன்காட்டு வலசு மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அத்தப்பர் தேவராஜ், சுந்தரசாமி, வேணுகாபால், ரமேஷ், தி.மு.க., நிர்வாகிகளான லதா சம்பத்குமார், தனபால், கணேஷ் மற்றும் ஈரோடு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டலத்தலைவர் ஆர்.விஜயபாஸ்கர், நிர்வாகிகளான கே.ஜே.டிட்டோ, சிவா என்கிற சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.  https://www.tnurbantree.tn.gov.in,

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/