ஈரோடு ஆக. 1:

ஈரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள மார்க்கெட் சந்தில் கடந்த 6 ஆண்டுகலாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மார்கெட் சந்து பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணியை திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, ‘இந்த பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது’ என்றார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, பொதுச்செயலாளர்கள் ம.முகமது அர்சத், சச்சிதானந்தம், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today