சிவகிரி சூலை 18:

சிவகிரியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ஆயிரத்து 257 மூட்டைகளில் 95 ஆயிரத்து 91 கிலோ எடையுள்ள எள் விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கருப்பு எள் ஒரு கிலோ ரூ.73.22 ரூபாய் முதல் ரூ.107.39 வரையிலும், சிவப்பு ரக எள் ஒரு கிலோ ரூ.68.89 முதல் ரூ.105.79 வரையிலும், வெள்ளை ரக எள் ஒரு கிலோ ரூ.75.49 முதல் ரூ.101.99 வரையிலான விலையில் வியாபாரிகள் ஏலம் கோரினர். மொத்தமாக ஆயிரத்து 257 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 95 ஆயிரத்து 91 கிலோ எள் ரூ.81 லட்சத்து 84 ஆயிரத்து 871க்கு விற்பனையானது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today