ஈரோடு நவ 8:
போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், போக்குவரத்து ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு துணை போக்குவரத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆம்னி பஸ்களில் சிறப்பு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மற்றும் ஈரோடு சரகத்தில் வட்டார போக்குக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை செய்யப்பட்டது. தற்போது வரை 34 ஆம்னி பஸ்களின் மீது தணிக்கை அறிக்கை போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 32 ஆம்னி பஸ்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
மேலும் வரி செலுத்தாமல் இயங்கிய 2 ஆம்னி பஸ்கள் மற்றும் அதிக கட்டணம் வசூலித்த ஒரு ஆம்னி பஸ்கள் என 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.24 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/