ஈரோடு நவ 1:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பா.ஜ, எம்.எல்.ஏ., சரஸ்வதி ஆகியோர் ஆய்வு செய்தனர். மொடக்குறிச்சி யூனியன் கஸ்பாபேட்டை பஞ்சாயத்து நாதக்கவுண்டன்பாளையத்தில் 15.47 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டடத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
அப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் குறித்த பட்டியல் வழங்கும்படி கேட்டார். பின், பள்ளியூத்து பஞ்சாயத்தில் தொகுப்பு பால் குளிரகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை அமைச்சர் சு.முத்துசாமி, எம்.எல்.ஏ., சரஸ்வதி ஆகியோர் வழங்கினர். பயிர் கடன் வழங்குவது பற்றி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விளக்கினார். பின் கொடுமுடி யூனியன் தாமரைபாளையம் பஞ்சாயத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி, துணை தலைவர் ஆர்.கஸ்துாரி உட்பட பலர் பங்கேறறனர். https://www.erode.nic.in, https://www.tnschool.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/