ஈரோடு டிச 20:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், நம்மை காக்கும்–48 என்ற திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதேநேரம் பெரும்பாலான மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம், இன்னுயிர் காப்போம் திட்ட துவக்க நிகழ்ச்சிகள் நடந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை, பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நவமணி கந்தசாமி, மருத்துவ கல்லுாரி முதல்வர் மணி உட்பட பலர் பங்கேற்றனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today