கொடுமுடி ஆக 11:

கொடுமுடி அருகே சாலைபுதுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம் நடந்தது. விவசாயிகள் 21 ஆயிரத்து 440 தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய் ரூ.26.10 முதல் ரூ.31.29 வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம் 7 ஆயிரத்து 127 கிலோ தேங்காய் ரூ.ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 548 க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு 899 மூட்டையில் கொண்டு வந்தனர்.

முதல் தரம் ஒரு கிலோ ரூ.105.40 முதல் ரூ.107.80 க்கும், இரண்டாம் தரம் கிலோ ரூ.81.19 முதல் ரூ.105.60 வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம் 41 ஆயிரத்து 40 கிலோ தேங்காய் பருப்பு ரூ.42 லட்சத்து 24 ஆயிரத்து 333 க்கு விற்பனையானது. எள் 63 மூட்டை கொண்டு வரப்பட்டு, சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.70.89 முதல் ரூ.100.91 க்கு விற்பனையானது.

மொத்தம் 4 ஆயிரத்து, 665 கிலோ எள் ரூ.மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 853 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்த விளை பொருளும் சேர்ந்து ரூ.47 லட்சத்து 91 ஆயிரத்து 734 ரூபாய்க்கு விற்பனையானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today